2 ஒரு எபிரெயனை நீங்கள் அடிமையாக வாங்கினால்,+ அவன் உங்களிடம் ஆறு வருஷங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் வருஷம் அவனிடமிருந்து எதையும் வாங்காமல் அவனை விடுதலை செய்துவிட வேண்டும்.+
10 50-ஆம் வருஷத்தை நீங்கள் புனிதமாக்கி, தேசத்திலுள்ள எல்லாருக்கும் விடுதலையை* அறிவிக்க வேண்டும்.+ அந்த வருஷம் உங்களுக்கு விடுதலை* வருஷமாக இருக்கும். அவரவர் தங்களுடைய பரம்பரை நிலத்துக்கும் தங்களுடைய குடும்பத்துக்கும் திரும்பிப்போக வேண்டும்.+