-
2 ராஜாக்கள் 25:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 சிதேக்கியா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம் 10-ஆம் மாதம் 10-ஆம் தேதியில், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார்+ தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு எருசலேமுடன் போர் செய்ய வந்தான்.+ நகரத்துக்கு எதிராக முகாம்போட்டு, அதைச் சுற்றிலும் முற்றுகைச் சுவர் எழுப்பினான்.+ 2 சிதேக்கியா ராஜா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம்வரை முற்றுகை நீடித்தது.
-
-
2 நாளாகமம் 36:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+
-