உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 29:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 உனக்கு எதிராக எல்லா பக்கங்களிலும் முகாம்போடுவேன்.

      உன்னைச் சுற்றிவளைத்து கூர்முனைக் கம்பங்களை நாட்டுவேன்.

      மண்மேடுகளை எழுப்பி உன்னைத் தாக்குவேன்.+

  • எரேமியா 32:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அப்போது, பாபிலோன் ராஜாவின் படைகள் எருசலேமைச் சுற்றிவளைத்திருந்தன. யூதாவின் ராஜாவுடைய அரண்மனையில் இருந்த ‘காவலர் முற்றத்தில்’+ எரேமியா தீர்க்கதரிசி காவல் வைக்கப்பட்டிருந்தார்.

  • எரேமியா 32:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் இந்த நகரத்தை கல்தேயர்களின் கையிலும் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையிலும் கொடுப்பேன். அவன் இதைக் கைப்பற்றுவான்.+

  • எரேமியா 39:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 சிதேக்கியா ராஜா யூதாவை ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம், 10-ஆம் மாதம், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய படைகளோடு வந்து எருசலேமைச் சுற்றிவளைத்தான்.+

  • எரேமியா 52:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால், சிதேக்கியா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம் 10-ஆம் மாதம் 10-ஆம் தேதியில், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு எருசலேமுடன் போர் செய்ய வந்தான். அவர்கள் நகரத்துக்கு எதிராக முகாம்போட்டு, சுற்றிலும் முற்றுகைச் சுவர் எழுப்பினார்கள்.+ 5 சிதேக்கியா ராஜா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம்வரை முற்றுகை நீடித்தது.

  • எசேக்கியேல் 4:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பின்பு அவர் என்னிடம், “மனிதகுமாரனே, செங்கல் ஒன்றை எடுத்து உன் முன்னால் வை. அதன்மேல் எருசலேம் நகரத்தின் படத்தைச் செதுக்கு. 2 முற்றுகையிடுவது போல+ அதைச் சுற்றிலும் முற்றுகைச் சுவரைக் கட்டி,+ மண்மேடுகளை எழுப்பு.+ முகாம்களை அமைத்து, மதில் இடிக்கும் இயந்திரங்களைச் சுற்றிலும் நிறுத்து.+

  • எசேக்கியேல் 21:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பாபிலோன் ராஜா அந்த இரண்டு வழிகளும் பிரிகிற இடத்தில் நின்று குறிபார்ப்பான். தன்னுடைய அம்புகளைக் குலுக்கிப்போட்டு, தன்னுடைய சிலைகளிடம்* விசாரிப்பான். கல்லீரலை வைத்துக் குறிபார்ப்பான். 22 அப்போது, எருசலேமுக்குப் போக வேண்டும் என்று அவனுடைய வலது கையில் குறி கிடைக்கும். மதில் இடிக்கும் இயந்திரங்களைக் கொண்டுபோய் நிறுத்தும்படியும், தாக்குதலை ஆரம்பிக்க கட்டளை கொடுக்கும்படியும், போர் முழக்கம் செய்யும்படியும், இயந்திரங்களால் நுழைவாசல்களை இடிக்கும்படியும், சுற்றிலும் மண்மேடுகளை எழுப்பும்படியும், முற்றுகைச் சுவரைக் கட்டும்படியும்+ அவனுக்குக் குறி கிடைக்கும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்