-
2 ராஜாக்கள் 25:4-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 நகரத்தின் மதில் உடைக்கப்பட்டது;+ கல்தேயர்கள் நகரத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, எல்லா வீரர்களும் ராஜாவின் தோட்டத்துக்குப் பக்கத்தில் இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசல் வழியாக ராத்திரியில் தப்பித்து ஓடினார்கள். அரபா வழியாக ராஜா தப்பித்துப் போனார்.+ 5 ஆனால், கல்தேய வீரர்கள் அவரைத் துரத்திக்கொண்டுபோய், எரிகோ பாலைநிலத்தில் பிடித்தார்கள்; அவருடைய வீரர்கள் எல்லாரும் அவரைவிட்டு சிதறி ஓடினார்கள். 6 கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து,+ ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். அங்கே அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 7 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களைப் படுகொலை செய்தார்கள். பின்பு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+
-
-
எரேமியா 52:7-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 கடைசியில், நகரத்தின் மதில் உடைக்கப்பட்டது. கல்தேயர்கள் நகரத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா வீரர்களும் ராஜாவின் தோட்டத்துக்குப் பக்கத்தில் இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசல் வழியாக ராத்திரியில் நகரத்திலிருந்து தப்பித்துப் போனார்கள். அவர்கள் அரபா வழியாகத் தப்பித்து ஓடினார்கள்.+ 8 ஆனால், கல்தேய வீரர்கள் சிதேக்கியாவைத் துரத்திக்கொண்டுபோய்,+ எரிகோ பாலைநிலத்தில் பிடித்தார்கள். அவருடைய வீரர்கள் எல்லாரும் அவரைவிட்டு சிதறி ஓடினார்கள். 9 கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து, காமாத்திலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். ராஜா அவனுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கினான். 10 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களை பாபிலோன் ராஜா படுகொலை செய்தான். யூதாவின் அதிகாரிகள் எல்லாரையும்கூட ரிப்லாவில் படுகொலை செய்தான். 11 பின்பு பாபிலோன் ராஜா, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி,+ அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவர் சாகும்வரை காவலிலேயே வைத்திருந்தான்.
-