6 யெகோவா சொல்வது இதுதான்:
‘எகிப்துக்கு உதவி செய்கிறவர்களும் வீழ்த்தப்படுவார்கள்.
எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கும்.’+
‘மிக்தோலிலிருந்து+ செவெனே+ நகரம் வரைக்கும் அவர்கள் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.