உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 25:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+

  • எரேமியா 25:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 எகிப்தில் இருக்கிற மற்ற தேசத்தாருக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன். ஊத்ஸ் தேசத்தின் ராஜாக்கள் எல்லாருக்கும், பெலிஸ்திய தேசத்தின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ அதாவது அஸ்கலோனின் ராஜாவுக்கும்,+ காசாவின் ராஜாவுக்கும், எக்ரோனின் ராஜாவுக்கும், அஸ்தோத்தில் மீதியாக இருக்கிறவர்களின் ராஜாவுக்கும்,

  • எசேக்கியேல் 25:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீராத பகையினால் பெலிஸ்தியர்கள் என்னுடைய ஜனங்களைப் பழிவாங்கவும் அழிக்கவும் சதி செய்தார்கள்.+ 16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன்.+ கிரேத்தியர்களை அழிப்பேன்.+ கடலோரத்தில் மீதியாக இருக்கிறவர்களை ஒழித்துக்கட்டுவேன்.+

  • ஆமோஸ் 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 யெகோவா சொல்வது இதுதான்:

      ‘“காசா நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

      சிறைபிடித்த+ எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.

  • செப்பனியா 2:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 காசா நகரம் வெறிச்சோடிப் போகும்.

      அஸ்கலோன் நகரம் பாழாக்கப்படும்.+

      அஸ்தோத் ஜனங்கள் பட்டப்பகலில் விரட்டப்படுவார்கள்.

      எக்ரோன் ஜனங்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.+

  • சகரியா 9:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 அதைப் பார்த்து அஸ்கலோன் பயந்து நடுங்கும்.

      காசா வேதனையில் துடிக்கும்.

      தீருவின் மேல் வைத்த நம்பிக்கை வீண்போனதால் எக்ரோனும் துக்கப்படும்.

      காசாவின் ராஜா அழிந்துபோவான்.

      அஸ்கலோனில் யாருமே குடியிருக்க மாட்டார்கள்.+

       6 அஸ்தோத்தில் கலப்பின ஜனங்கள்தான் வாழ்வார்கள்.

      பெலிஸ்தியர்களின் ஆணவத்தை நான் ஒழித்துக்கட்டுவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்