-
2 நாளாகமம் 21:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 பின்பு, யோராமை எதிர்த்துப் போர் செய்வதற்காக பெலிஸ்தியர்களையும்,+ எத்தியோப்பியர்களுக்குப் பக்கத்தில் இருந்த அரேபியர்களையும்+ யெகோவா தூண்டினார்.+ 17 அதனால் அவர்கள் யூதா தேசத்தின்மேல் படையெடுத்து வந்து, அதைத் தாக்கினார்கள்; அரண்மனையில் இருந்த எல்லா பொருள்களையும் கொள்ளையடித்தார்கள்.+ அதோடு, ராஜாவின் மகன்களையும் மனைவிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அவருடைய கடைசி மகன் யோவாகாசை*+ மட்டும் அவரிடம் விட்டுவிட்டார்கள்.
-
-
2 நாளாகமம் 28:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அதோடு, பெலிஸ்தியர்களும்+ சேப்பெல்லா+ பகுதியில் இருந்த நகரங்களிலும் யூதாவின் நெகேபிலும் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்த பெத்-ஷிமேசையும்+ ஆயலோனையும்+ கெதெரோத்தையும் சோகோவையும் அதன் சிற்றூர்களையும்,* திம்னாவையும்+ அதன் சிற்றூர்களையும், கிம்சோவையும் அதன் சிற்றூர்களையும் பிடித்தார்கள். பின்பு, அங்கே குடியேறினார்கள்.
-