-
ஏசாயா 23:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
கடல் கடந்து கித்தீமுக்குப்+ போ.
அங்கேயும் உனக்கு நிம்மதி கிடைக்காது” என்று சொல்கிறார்.
-
-
எசேக்கியேல் 25:15-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீராத பகையினால் பெலிஸ்தியர்கள் என்னுடைய ஜனங்களைப் பழிவாங்கவும் அழிக்கவும் சதி செய்தார்கள்.+ 16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன்.+ கிரேத்தியர்களை அழிப்பேன்.+ கடலோரத்தில் மீதியாக இருக்கிறவர்களை ஒழித்துக்கட்டுவேன்.+ 17 அவர்களைக் கடும் கோபத்தோடு தண்டித்து, பயங்கரமாகப் பழிவாங்குவேன். அவர்களை நான் பழிதீர்க்கும்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”’”
-
-
சகரியா 9:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 ஓர் அறிவிப்பு:
“யெகோவாவின் கண்கள் எல்லா மனிதர்களையும் பார்க்கின்றன.+
அவருடைய பார்வை இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றின் மேலும் இருக்கிறது.
அதனால், ஆதிராக் தேசத்துக்கு எதிராகவும்
தமஸ்குவுக்கு எதிராகவும் யெகோவா தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.+
2 அவளுடைய* எல்லையில் இருக்கும் காமாத்துக்கு எதிராகவும்+
ரொம்பவே ஞானமாக நடந்துகொள்கிற+ தீருவுக்கும்+ சீதோனுக்கும்+ எதிராகவும் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.
-