6 யெகோவா சொல்வது இதுதான்:
‘“காசா நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.
சிறைபிடித்த+ எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.
7 அதனால், காசாவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.+
அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.
8 அஸ்தோத்தில் இருக்கிற ஜனங்களை அழிக்கப்போகிறேன்.+
அஸ்கலோனின் ராஜாவைக் கொல்லப்போகிறேன்.+
எக்ரோனுக்கு எதிராக என்னுடைய கையை ஓங்கப்போகிறேன்.+
மீதியிருக்கும் பெலிஸ்தியர்கள் ஒழிந்துபோவார்கள்”+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.’