5 மேய்ப்பன் இல்லாததால் அவை சிதறிப்போயின.+ அவை நாலாபக்கமும் சிதறிப்போய்க் காட்டு மிருகங்களுக்கு இரையாகிவிட்டன. 6 என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. அவை பூமியின் எல்லா பக்கத்திலும் சிதறிப்போயின. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க யாரும் போகவில்லை.