உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 79:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 உங்களுடைய ஊழியர்களின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாக்கினார்கள்.

      உங்களுக்கு உண்மையாக* இருந்தவர்களின் உடலைக் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கினார்கள்.+

       3 அவர்களுடைய இரத்தத்தை எருசலேம் முழுவதும் தண்ணீர்போல் ஊற்றினார்கள்.

      அவர்களை அடக்கம் செய்ய ஒருவனும் இல்லை.+

  • ஏசாயா 5:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அதனால்தான், யெகோவாவின் கோபம் அவருடைய ஜனங்கள்மேல் பற்றியெரிகிறது.

      அவர் தன்னுடைய கையை ஓங்குவார், அவர்களைத் தண்டிப்பார்.+

      அப்போது மலைகள் அதிரும்.

      அவர்களுடைய பிணங்கள் குப்பைபோல் தெருக்களில் குவிந்து கிடக்கும்.+

      அவர்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.

      அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.

  • எரேமியா 7:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 இந்த ஜனங்களுடைய பிணங்கள் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கும் பூமியில் நடமாடுகிற மிருகங்களுக்கும் உணவாகும். அவற்றை விரட்டிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.+

  • எரேமியா 9:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 நீ இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்:

      “ஜனங்களுடைய பிணங்கள் எருவைப் போல நிலத்தில் கிடக்கும்.

      அறுத்துப் போடப்பட்ட கதிர்களைப் போலக் கிடக்கும்.

      அவற்றை எடுக்க யாருமே வர மாட்டார்கள்.”’”+

  • எரேமியா 36:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அதனால், யூதாவின் ராஜா யோயாக்கீமுக்கு எதிராக யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனுடைய வம்சத்தில் யாரும் தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்கார மாட்டார்கள். அவனுடைய பிணம் ராத்திரி பகலாக வெயிலிலும் குளிரிலும் கிடக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்