உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 24:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 யோயாக்கீம் இறந்த* பின்பு அடக்கம் செய்யப்பட்டார்;+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோயாக்கீன் ராஜாவானார்.

  • 2 ராஜாக்கள் 24:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 யோயாக்கீன்+ ராஜாவானபோது அவருக்கு 18 வயது. அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் நெகுஸ்தாள்; அவள் எருசலேமைச் சேர்ந்த எல்நாத்தானின் மகள்.

  • 2 ராஜாக்கள் 24:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இப்படி, யோயாக்கீனையும்+ அவருடைய அம்மாவையும் மனைவிகளையும் அரண்மனை அதிகாரிகளையும் பிரபலமான ஆண்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+

  • 2 நாளாகமம் 36:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 யோயாக்கீன்+ ராஜாவானபோது அவருக்கு 18 வயது. அவர் எருசலேமில் மூன்று மாதங்கள், பத்து நாட்கள் ஆட்சி செய்தார். யெகோவா வெறுக்கிற காரியங்களையே அவர் செய்துவந்தார்.+ 10 வருஷத்தின்* ஆரம்பத்தில், யோயாக்கீனையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த விலைமதிப்புள்ள பொருள்களையும்+ பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்காகப் படைவீரர்களை நேபுகாத்நேச்சார் அனுப்பினான்.+ யோயாக்கீனுக்குப் பதிலாக, அவருடைய சித்தப்பாவான சிதேக்கியாவை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக்கினான்.+

  • எரேமியா 22:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 யெகோவா சொல்வது இதுதான்: ‘யோயாக்கீமின்+ மகனும் யூதாவின் ராஜாவுமான கோனியாவே,*+ நீ என் வலது கையில் ஒரு முத்திரை மோதிரமாக இருந்தாலும் நான் உன்னைக் கழற்றி எறிவேன்! இதை என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.*

  • எரேமியா 22:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 யெகோவா சொல்வது இதுதான்:

      ‘இவனுக்கு வாரிசே இல்லை என்றும்,

      வாழ்க்கையில் இவன் வெற்றி பெறவே மாட்டான் என்றும் எழுதுங்கள்.

      ஏனென்றால், இவனுடைய பிள்ளைகள் யாருமே தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார மாட்டார்கள்.

      அவர்கள் யாருமே இனி யூதாவை ஆட்சி செய்ய மாட்டார்கள்.’”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்