-
உபாகமம் 31:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 யெகோவா மோசேயிடம், “நீ இறக்கப்போகிறாய். இந்த ஜனங்கள், நான் கொடுக்கப்போகிற தேசத்திலுள்ள தெய்வங்களை வணங்கி எனக்குத் துரோகம் செய்வார்கள்.+ என்னைவிட்டு விலகி,+ நான் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை மீறுவார்கள்.+ 17 அப்போது, அவர்கள்மேல் என் கோபம் பற்றியெரியும்.+ நான் அவர்களைக் கைவிட்டுவிடுவேன்.+ அவர்கள் அழிந்துபோகும்வரை என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+ அவர்கள் பிரச்சினைகளிலும் கஷ்டங்களிலும் சிக்கித் தவிக்கும்போது,+ ‘நம் கடவுள் நம்மோடு இல்லாததால்தானே இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறோம்?’ என்று சொல்வார்கள்.+
-
-
2 நாளாகமம் 36:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
-