20 நான் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து இஸ்ரவேலர்களை வேரோடு பிடுங்கியெறிவேன்.+ என்னுடைய பெயருக்காக நான் புனிதப்படுத்திய இந்த ஆலயத்தை என் கண் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளிவிடுவேன். எல்லா மக்களும் அதைப் பார்த்து ஏளனமாகப் பேசும்படி செய்வேன், கேலி கிண்டல் செய்யும் நிலைக்குக் கொண்டுவருவேன்.+