48 யெகோவா உங்களுக்கு எதிராக விரோதிகளை அனுப்புவார். உங்களிடம் ஒன்றுமே இல்லாமல், பசியோடும்+ தாகத்தோடும் கிழிந்த துணிமணிகளோடும் அவர்களுக்கு வேலை செய்வீர்கள்.+ அவர் உங்களை அழிக்கும்வரை உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தடியை* சுமத்துவார்.
13 அதனால் நான் உங்களை இந்தத் தேசத்திலிருந்து வேறொரு தேசத்துக்குத் துரத்தியடிப்பேன். உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத அந்தத் தேசத்தில்+ நீங்கள் ராத்திரி பகலாகப் பொய் தெய்வங்களுக்குத்தான் சேவை செய்ய வேண்டியிருக்கும்.+ நான் உங்களுக்கு இரக்கம் காட்டவே மாட்டேன்”’ என்று சொல்.