-
2 ராஜாக்கள் 23:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 யோசியாவின் காலத்தில், அசீரிய ராஜாவுக்கு உதவ யூப்ரடிஸ்* ஆற்றின் அருகே எகிப்தின் ராஜாவான பார்வோன் நேகோ வந்தான். உடனே யோசியா அவனை எதிர்த்துப் போர் செய்யப் போனார். ஆனால் நேகோ, மெகிதோவில்+ அவரைப் பார்த்ததும் அங்கே கொன்றுபோட்டான். 30 அப்போது யோசியாவின் ஊழியர்கள் அவருடைய உடலை ஒரு ரதத்தில் வைத்து, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அங்கே அவருடைய கல்லறையில் அடக்கம் செய்தார்கள். பின்பு, பொதுமக்கள் அவருடைய மகன் யோவாகாசை அபிஷேகம் செய்து ராஜாவாக்கினார்கள்.+
-