-
எசேக்கியேல் 34:11-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன். நானே அவற்றைக் கவனித்துக்கொள்வேன்.+ 12 சிதறிப்போன ஆடுகளைக் கண்டுபிடித்து கவனித்துக்கொள்கிற மேய்ப்பனைப் போல நான் என்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்வேன்.+ கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொண்ட நாளில்+ சிதறிப்போன என் ஆடுகளை எல்லா இடங்களிலிருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவேன். 13 எல்லா தேசங்களின் நடுவிலிருந்தும் ஜனங்களின் நடுவிலிருந்தும் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் தேசமான இஸ்ரவேலுக்குக் கொண்டுவந்து மலைகளிலும் ஓடைகளின் கரைகளிலும் ஜனங்கள் குடியிருக்கிற பகுதிகளிலும் மேய்ப்பேன்.+
-