உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதோடு, ஒரு கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுத்து, “நீங்கள் எல்லாரும் இதிலிருந்து குடியுங்கள்;+ 28 ஏனென்றால் இது, ‘ஒப்பந்தத்தை+ உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை’+ குறிக்கிறது; என் இரத்தம், பாவ மன்னிப்புக்கென்று+ பலருக்காகச் சிந்தப்படப்போகிறது.+

  • லூக்கா 22:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 உணவு சாப்பிட்ட பின்பு, அதேபோல் கிண்ணத்தையும் கொடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற+ என் இரத்தத்தின் அடிப்படையிலான+ புதிய ஒப்பந்தத்தைக்+ குறிக்கிறது.

  • 1 கொரிந்தியர் 11:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 உணவு சாப்பிட்ட பின்பு, அதேபோல் கிண்ணத்தையும் எடுத்து,+ “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தின் அடிப்படையிலான+ புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது;+ நீங்கள் இதிலிருந்து குடிக்கும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று சொன்னார்.+

  • எபிரெயர் 8:8-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஆனால், கடவுள் தன் மக்களுடைய குறையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்: “‘இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் நான் ஒரு புதிய ஒப்பந்தம் செய்வேன்’ என்று யெகோவா* சொல்கிறார். 9 ‘அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது+ செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது. ஏனென்றால், அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் தொடர்ந்து நடக்கவில்லை. அதனால், அவர்கள்மேல் அக்கறை காட்டுவதையே நான் விட்டுவிட்டேன்’ என்றும் யெகோவா* சொல்கிறார்.

      10 ‘அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் ஜனங்களோடு செய்யப்போகிற ஒப்பந்தம் இதுதான்’ என்று யெகோவா* சொல்கிறார். ‘நான் அவர்களுடைய மனதில் என் சட்டங்களை வைப்பேன், அவர்களுடைய இதயத்தில் அவற்றை எழுதுவேன்.+ நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+

      11 அதுமுதல் அவர்கள் யாரும் தங்களுடைய சக குடிமகனிடமோ தங்கள் சகோதரனிடமோ, “யெகோவாவை* பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!” என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள். 12 அவர்களுடைய அநீதியான செயல்களை இரக்கத்தோடு நான் மன்னிப்பேன், அவர்களுடைய பாவங்களை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்’ என்றும் அவர் சொல்கிறார்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்