13 நீங்கள் கண்டிப்பாக எழுந்து வந்து சீயோனுக்கு இரக்கம் காட்டுவீர்கள்.+
ஏனென்றால், நீங்கள் அவளுக்குக் கருணை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.+
நீங்கள் குறித்து வைத்த நேரம் வந்துவிட்டது.+
14 உங்களுடைய ஊழியர்கள் அவளுடைய கற்களை நெஞ்சார நேசிக்கிறார்கள்.+
அவளுடைய மண்ணின் மேல்கூட பாசம் வைத்திருக்கிறார்கள்.+
15 தேசங்களிலுள்ள ஜனங்களெல்லாம் யெகோவாவுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்.
பூமியிலுள்ள ராஜாக்களெல்லாம் அவருடைய மகிமைக்குப் பயப்படுவார்கள்.+