5 அதன்பின் அவர்கள் திரும்பி வந்து, தங்கள் கடவுளான யெகோவாவையும் தங்கள் ராஜாவான தாவீதையும் தேடுவார்கள்.+ கடைசி நாட்களில் அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தை* பெற அவரிடம் நடுக்கத்துடன் வருவார்கள்.+
32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+