-
எசேக்கியேல் 34:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அவர்களை மேய்க்க ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்.+ என் ஊழியனாகிய தாவீதுதான் அந்த மேய்ப்பன்.+ அவன் அவர்களை மேய்ப்பான். அவனே அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்.+ 24 யெகோவாவாகிய நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+ என் ஊழியனாகிய தாவீது அவர்களுடைய தலைவனாக இருப்பான்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்.
-
-
எசேக்கியேல் 37:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 என் ஊழியனாகிய தாவீது அவர்களுடைய ராஜாவாக இருப்பான்.+ அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பன்தான் இருப்பான்.+ அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளின்படி நடப்பார்கள், என்னுடைய சட்டதிட்டங்களைக் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள்.+ 25 என் ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்திலே, உங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த அந்தத் தேசத்திலே,+ அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் வாழ்வார்கள்.+ என் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுடைய தலைவனாக இருப்பான்.+
-
-
ஆமோஸ் 9:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+
கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*
சேதமானவற்றைச் சரிசெய்வேன்.
பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+
-
லூக்கா 1:31-33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 இதோ! நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்;+ அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்.+ 32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+ 33 அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது”+ என்று சொன்னார்.
-
-
-