-
ஏசாயா 34:6-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 யெகோவாவாகிய நான் போஸ்றாவில் ஒரு பலியைச் செலுத்தப்போகிறேன்.
ஏதோமில் உயிர்களைக் கொன்று குவிக்கப்போகிறேன்.+
அதற்காக யெகோவாவாகிய என்னிடம் ஒரு வாள் இருக்கிறது.
அந்த வாள் முழுவதிலும் இரத்தமும் கொழுப்பும்+ படியும்.
செம்மறியாட்டுக் கடாக் குட்டியின் இரத்தமும் வெள்ளாடுகளின் இரத்தமும்
செம்மறியாட்டுக் கடாக்களுடைய சிறுநீரகங்களின் மேலுள்ள கொழுப்பும் அதில் படியும்.
7 அவற்றோடு காட்டு எருதுகளும்
புஷ்டியான காளைகளும் இளம் காளைகளும் வெட்டிச் சாய்க்கப்படும்.
தேசத்தில் இரத்த ஆறு ஓடும்.
அதன் மண் கொழுப்பினால் சேறாகிவிடும்.”
-
-
எரேமியா 46:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அந்த நாள் உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுடைய நாள். அவருடைய எதிரிகளை அவர் பழிதீர்க்கும் நாள். யூப்ரடிஸ்+ ஆற்றங்கரையில் இருக்கிற வடக்கு தேசத்தில், உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா பலி கொடுக்கப்போகிறார்.* அவருடைய வாள் உயிர்களைப் பறித்து, திருப்தியாகும்வரை இரத்தத்தைக் குடிக்கப்போகிறது.
-