உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 38:4-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 நான் உன்னை எதிர்த்திசையில் திருப்பி, உன் வாயில் கொக்கிகளை மாட்டி,+ உன்னுடைய எல்லா படைகளோடும் குதிரைகளோடும் குதிரைவீரர்களோடும் வெளியே வர வைப்பேன்.+ உன் வீரர்கள் எல்லாரும் கம்பீரமாக உடை உடுத்திக்கொண்டு, பெரிய கேடயங்களோடும் சிறிய கேடயங்களோடும் திரண்டு வருவார்கள். அவர்கள் எல்லாருமே வாள் ஏந்திய வீரர்கள். 5 பெர்சியர்கள், எத்தியோப்பியர்கள், பூத்தியர்கள்+ எல்லாரும் சிறிய கேடயங்களோடும் தலைக்கவசங்களோடும் அவர்களுடன் இருக்கிறார்கள். 6 உன்னோடு கோமரும் கோமருடைய எல்லா படைவீரர்களும், வடகோடியில் இருக்கிற தொகர்மா+ வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா படைவீரர்களும் ஒரு பெரிய கூட்டமாகத் திரண்டிருக்கிறார்கள்.+

  • ஆகாய் 2:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 ராஜ்யங்களின் சிம்மாசனங்களைக் கவிழ்ப்பேன், எல்லா தேசத்து ராஜ்யங்களின் பலத்தையும் அழிப்பேன்.+ ரதங்களையும் ரதவீரர்களையும், குதிரைகளையும் குதிரைவீரர்களையும் வீழ்த்துவேன். அவர்கள் ஒருவரை ஒருவர் வாளால் வெட்டிக்கொண்டு சாவார்கள்’+ என்று யூதாவின் ஆளுநர் செருபாபேலிடம் போய்ச் சொல்.”

  • வெளிப்படுத்துதல் 19:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பின்பு, ஒரு தேவதூதர் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன். அவர் நடுவானத்தில்* பறக்கிற எல்லா பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில், “இங்கே வாருங்கள், கடவுள் கொடுக்கிற மாபெரும் விருந்துக்குக் கூடிவாருங்கள்.+ 18 ராஜாக்களின் சதையையும், படைத் தளபதிகளின் சதையையும், பலசாலிகளின் சதையையும்,+ குதிரைகளின் சதையையும், அவற்றின் மேல் ஏறியிருக்கிறவர்களின் சதையையும்,+ சுதந்திர மக்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருடைய சதையையும் சாப்பிட வாருங்கள்” என்று கூப்பிட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்