-
எரேமியா 29:31, 32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 “சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஜனங்களுக்கும் இந்தச் செய்தியை அனுப்பு: ‘நெகெலாமைச் சேர்ந்த செமாயாவைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “செமாயாவை நான் அனுப்பவில்லை. அவனாகவே உங்களிடம் தீர்க்கதரிசனம் சொன்னான். பொய்கள் சொல்லி உங்களை ஏமாற்ற நினைத்தான்.+ 32 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நெகெலாமைச் சேர்ந்த செமாயாவையும் அவன் சந்ததியையும் நான் தண்டிப்பேன். அவர்களில் ஒருவன்கூட என்னுடைய ஜனங்களோடு சேர்ந்து தப்பிக்க மாட்டான். என் ஜனங்களுக்கு நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை அவன் பார்க்க மாட்டான். ஏனென்றால், யெகோவாவாகிய எனக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி அவன் ஜனங்களைத் தூண்டியிருக்கிறான்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”
-