-
எரேமியா 14:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அப்போது யெகோவா என்னிடம், “அந்தத் தீர்க்கதரிசிகள் என் பெயரில் பொய்யாகத் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+ நான் அவர்களிடம் பேசவும் இல்லை, அவர்களைப் பேசச் சொல்லவும் இல்லை, அவர்களை அனுப்பவும் இல்லை.+ அவர்கள் பார்த்ததாகச் சொல்லும் தரிசனங்களெல்லாம் பொய். அவர்கள் குறிசொல்கிறபடி எதுவுமே நடக்காது. அவர்களே கதைகளை ஜோடித்து உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.+
-
-
எரேமியா 28:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம்,+ “அனனியாவே, தயவுசெய்து கேள்! யெகோவா உன்னை அனுப்பவில்லை. நீ பொய் பேசி இந்த ஜனங்களை ஏமாற்றியிருக்கிறாய்.+ 16 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் உன்னை இந்த உலகத்திலிருந்தே ஒழித்துக்கட்டுவேன். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போக நீ ஜனங்களைத் தூண்டியதால் இந்த வருஷமே செத்துப்போவாய்’”+ என்று சொன்னார்.
-
-
எசேக்கியேல் 13:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 “‘அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “‘நீங்கள் பொய்களைச் சொன்னதாலும் போலித் தரிசனங்களைப் பார்த்ததாலும் நான் உங்கள் எதிரியாகிவிட்டேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா+ சொல்கிறார்.” 9 போலித் தரிசனங்களைப் பார்த்துப் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொல்கிற தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்.+ எனக்குப் பிரியமான ஜனங்களோடு அவர்கள் இருக்க மாட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்களுடைய பதிவேட்டில் அவர்களுடைய பெயர் இருக்காது. அவர்கள் இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பிவர மாட்டார்கள். அப்போது, நான்தான் உன்னதப் பேரரசராகிய யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+
-