உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 80:14-16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 பரலோகப் படைகளின் கடவுளே, தயவுசெய்து எங்களிடம் திரும்புங்கள்.

      பரலோகத்திலிருந்து கீழே பாருங்கள்.

      இந்தத் திராட்சைக் கொடியைக் கவனித்துக்கொள்ளுங்கள்.+

      15 உங்கள் வலது கையால் நட்டு வைத்த கொடியை*+ பாருங்கள்.

      உங்களுக்காக நீங்கள் பலப்படுத்திய உங்கள் மகனை*+ பாருங்கள்.

      16 இந்தக் கொடி வெட்டப்பட்டு நெருப்பில் போடப்படுகிறது.+

      நீங்கள் மிரட்டும்போது அவர்கள் அழிந்துபோகிறார்கள்.

  • ஏசாயா 5:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 வைக்கோல் நெருப்பில் எரிந்துபோவதைப் போலவும்,

      காய்ந்த புல் தீயில் பொசுங்கிவிடுவதைப் போலவும்,

      அவர்களுடைய வேர்கள் அடியோடு அழிந்துபோகும்.

      அவர்களுடைய மொட்டுகள் கருகி உதிர்ந்துபோகும்.

      பரலோகப் படைகளின் யெகோவாவுடைய சட்டத்தை* அவர்கள் ஒதுக்கித்தள்ளினார்கள்.

      இஸ்ரவேலர்களுடைய பரிசுத்தமான கடவுளின் பேச்சை மதிக்காமல் போனார்கள்.+

  • எரேமியா 7:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதனால், ‘இந்த இடத்தின் மேலும், மனுஷர்கள்மேலும், மிருகங்கள்மேலும், மரங்கள்மேலும், பயிர்கள்மேலும் என் கோபத் தீ பற்றியெரியும்.+ அது அணையாமல் எரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.

  • எசேக்கியேல் 20:47
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 தெற்கில் இருக்கிற காட்டுப்பகுதியைப் பார்த்து இப்படிச் சொல்: ‘யெகோவாவின் செய்தியைக் கேள். உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, நான் உன்மேல் தீ வைக்கப் போகிறேன்.+ அது பச்சையான எல்லா மரங்களையும் பட்டுப்போன எல்லா மரங்களையும் ஒன்றுவிடாமல் பொசுக்கிவிடும். அந்தத் தீயை அணைக்க முடியாது.+ தெற்கிலிருந்து வடக்குவரை எல்லாருடைய முகங்களையும்* அது சுட்டெரிக்கும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்