4 தீரு, சீதோன், பெலிஸ்தியா பகுதிகளில் வாழ்கிறவர்களே,
என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் இப்படி நடந்துகொள்வீர்கள்?
என்னைப் பழிவாங்க நினைக்கிறீர்களோ?
நீங்கள் என்னைப் பழிவாங்க நினைத்தால்,
நான் சீக்கிரமாகவும் வேகமாகவும் வந்து உங்களைப் பழிவாங்குவேன்.+
5 என்னுடைய வெள்ளியையும் தங்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்.+
என்னுடைய விலைமதிப்புள்ள பொருள்களை உங்கள் கோயில்களுக்குக் கொண்டுபோனீர்கள்.
6 யூதா ஜனங்களையும் எருசலேம் ஜனங்களையும் கிரேக்கர்களிடம் விற்றீர்கள்.+
தேசத்தைவிட்டு ரொம்பத் தூரத்துக்குத் துரத்தியடித்தீர்கள்.