-
1 ராஜாக்கள் 10:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 சாலொமோனின் புகழைப் பற்றியும், அவருடைய புகழ் யெகோவாவின் பெயருக்குப் பெருமை சேர்த்ததைப்+ பற்றியும் சேபா தேசத்து ராணி கேள்விப்பட்டாள். அதனால், சிக்கலான கேள்விகளைக் கேட்டு* அவருடைய அறிவைச் சோதித்துப் பார்க்க வந்தாள்;+ 2 மிகப் பெரிய பரிவாரத்துடன் எருசலேமுக்கு வந்தாள்.+ பரிமளத் தைலத்தையும்+ ஏராளமான தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் அவளுடைய ஒட்டகங்கள் சுமந்துவந்தன. அவள் சாலொமோனைச் சந்தித்து, தன் மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாள்.
-