உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 25:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அதனால் யாக்கோபிடம், “நான் ரொம்பக் களைத்துப்போயிருக்கிறேன்,* தயவுசெய்து அந்தச் சிவப்பான கூழைக் கொஞ்சம்* தா! சீக்கிரம் கொடு!” என்று கேட்டான். அதனால்தான் அவனுக்கு ஏதோம்*+ என்ற பெயர் வந்தது.

  • ஏசாயா 34:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 “ஏனென்றால், வானத்திலே என் வாளில் இரத்தம் சொட்டும்.+

      அது ஏதோமின் மேலும் நான் அழிக்க நினைத்திருக்கிற ஜனங்களின் மேலும் இறங்கி

      என் தீர்ப்பை நிறைவேற்றும்.+

  • எசேக்கியேல் 25:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏதோம் மிகப் பெரிய குற்றம் செய்திருக்கிறது. அது யூதா ஜனங்களைப் பழிவாங்கியிருக்கிறது.+ 13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் ஏதோமைத் தண்டித்து, மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.+ தேமானிலிருந்து தேதான்வரை இருக்கிற எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+

  • ஆமோஸ் 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவா இப்படிச் சொல்கிறார்:

      ‘ஏதோம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

      வாளை எடுத்துக்கொண்டு சொந்த சகோதரனையே அவன் துரத்தினான்.+

      இரக்கம் காட்ட மறுத்துவிட்டான்.

      இன்னமும் வெறித்தனமாகத் தாக்கிக்கொண்டே இருக்கிறான்.

      பயங்கர கோபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறான்.+

  • ஒபதியா 1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 1 ஒபதியா* பார்த்த தரிசனம்.

      ஏதோமைப்+ பற்றி உன்னதப் பேரரசராகிய யெகோவா சொன்னதை ஒபதியா இப்படி விவரித்தார்:

      “யெகோவாவிடமிருந்து நமக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.

      எல்லா தேசங்களுக்கும் அதைச் சொல்ல ஒரு தூதுவர் அனுப்பப்பட்டிருக்கிறார்.

      ‘தயாராகுங்கள், ஏதோமுக்கு எதிராகப் போர் செய்யப் புறப்படுவோம்!’+ என்று அந்தத் தூதுவர் அறிவிக்கிறார்.”

  • மல்கியா 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 “‘நாங்கள் துரத்தியடிக்கப்பட்டாலும் திரும்பி வருவோம், இடிந்து கிடக்கிற எங்கள் நகரங்களைக் கட்டுவோம்’ என்று ஏதோம் ஜனங்கள் சொல்கிறார்கள். ஆனால், பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் கட்டுவார்கள், ஆனால் நான் இடித்துப் போடுவேன். ஏதோம் தேசம் “அக்கிரமக்காரர்களின் தேசம்” என்றும், அதன் ஜனங்கள் “யெகோவாவிடமிருந்து நிரந்தரமான கண்டனத் தீர்ப்பைப் பெற்ற ஜனங்கள்”+ என்றும் அழைக்கப்படுவார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்