உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 15:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அதற்கு சாமுவேல், “யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதைவிட தகன பலிகளும் காணிக்கைகளும் யெகோவாவுக்குப் பிரியமாக இருக்குமா?+ பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்,+ செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பைச்+ செலுத்துவதைவிட அவர் பேச்சைக் கேட்பதுதான் முக்கியம்.

  • நீதிமொழிகள் 21:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 பலி செலுத்துவதைவிட ஒருவன் நீதி நியாயத்தோடு நடப்பதைத்தான்

      யெகோவா மிகவும் விரும்புகிறார்.+

  • ஏசாயா 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் எத்தனை பலிகளைக் கொடுத்தாலும் எனக்கு என்ன லாபம்?+

      உங்களுடைய செம்மறியாட்டுக் கடாக்களின் தகன பலிகளும்,+ புஷ்டியான மிருகங்களின் கொழுப்பும்+ எனக்கு வெறுப்பாக இருக்கிறது.

      இளம் காளைகள்,+ செம்மறியாட்டுக் குட்டிகள், வெள்ளாடுகள்+ ஆகியவற்றின் இரத்தம்+ எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

  • மீகா 6:6-8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 யெகோவாவுக்காக நான் எதைக் கொண்டுவருவேன்?

      பரலோகத்தின் கடவுளை வணங்க எதை எடுத்துவருவேன்?

      தகன பலிகளைக் கொண்டுவர வேண்டுமா?

      ஒருவயதுள்ள கன்றுக்குட்டிகளை எடுத்துவர வேண்டுமா?+

       7 ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக் கடாக்களைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுவாரா?

      ஆறுகளாய் ஓடும் எண்ணெயை விரும்புவாரா?+

      நான் செய்த தவறுக்காக என்னுடைய மூத்த மகனைத் தர வேண்டுமா?

      நான் செய்த பாவத்துக்காக என் பிள்ளையைக் கொடுக்க வேண்டுமா?+

       8 மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார்.

      யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?*

      நியாயத்தைக் கடைப்பிடித்து,+ உண்மைத்தன்மையை* நெஞ்சார நேசித்து,+

      அடக்கத்தோடு+ உன் கடவுளுடைய வழியில்* நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!+

  • மத்தேயு 9:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால், ‘பலியை அல்ல, இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’+ என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று சொன்னார்.

  • மத்தேயு 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ‘பலியை அல்ல,+ இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’+ என்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்திருந்தால், குற்றமற்றவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்