3 அதனால், இஸ்ரவேலர்கள்மீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ யோவாகாசின் காலமெல்லாம் சீரியாவின் ராஜாவான அசகேல்+ கையிலும் அவனுடைய மகன் பெனாதாத்+ கையிலும் இஸ்ரவேலர்களை அவர் விட்டுவிட்டார்.
19 அப்போது, அசீரியாவின் ராஜாவான பூல்+ இஸ்ரவேலை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். அவனுக்கு 1,000 தாலந்து* வெள்ளியைக் கொடுத்து அவனுடைய உதவியுடன் மெனாகேம் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார்.+