8 யெகோவா தன்னுடைய பலமான வலது கையை உயர்த்தி இப்படி உறுதிமொழி கொடுத்திருக்கிறார்:
“உங்கள் தானியத்தை இனியும் எதிரிகள் சாப்பிடுவதற்கு விட மாட்டேன்.
நீங்கள் பாடுபட்டுத் தயாரித்த புதிய திராட்சமதுவை இனியும் மற்ற தேசத்து ஜனங்கள் குடிக்க அனுமதிக்க மாட்டேன்.+
9 தானியத்தை அறுவடை செய்கிறவர்கள்தான் அதைச் சாப்பிடுவார்கள், அவர்கள் யெகோவாவைப் புகழ்வார்கள்.
திராட்சமதுவைத் தயாரித்தவர்கள்தான் அதை என் பரிசுத்த பிரகாரங்களில் குடிப்பார்கள்.”+