-
ஏசாயா 30:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 தரிசனம் பார்க்கிறவர்களிடம், ‘தரிசனங்களைப் பார்க்காதீர்கள்’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.
தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களிடம், ‘நீங்கள் பார்க்கிற நிஜமான தரிசனங்களைச் சொல்லாதீர்கள்.+
எங்கள் காதுக்கு இனிமையானதைச் சொல்லுங்கள்; நீங்களாகவே கற்பனை செய்து சொல்லுங்கள்.+
11 நேர்வழியில் போகாதீர்கள்; அந்தப் பாதையைவிட்டு விலகுங்கள்.
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளைப் பற்றி எங்களிடம் பேசுவதை நிறுத்துங்கள்’+ என்று சொல்கிறார்கள்.”
-