-
உபாகமம் 24:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 உங்கள் திராட்சைத் தோட்டத்தில் பழங்களைச் சேகரித்தபின், மீதியானதைப் பறிக்க மறுபடியும் போகக் கூடாது. உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் அவற்றை விட்டுவிட வேண்டும்.
-
-
எரேமியா 49:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 திராட்சைக் குலைகளை அறுக்க வருகிறவர்கள்
கொஞ்சத்தை விட்டுவைப்பார்கள், இல்லையா?
ராத்திரியில் வருகிற திருடர்கள்
தங்களுக்குப் போதுமானதை மட்டும் எடுத்துக்கொள்வார்கள், இல்லையா?+
10 ஆனால், நான் ஏசாவுக்குச் சொந்தமான எல்லாவற்றையுமே எடுத்துவிடுவேன்.
அவனால் எங்குமே ஒளிந்துகொள்ள முடியாதபடி
அவனுடைய மறைவிடங்களை வெட்டவெளிச்சமாக்குவேன்.
-