12 சிதறிப்போன ஆடுகளைக் கண்டுபிடித்து கவனித்துக்கொள்கிற மேய்ப்பனைப் போல நான் என்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்வேன்.+ கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொண்ட நாளில்+ சிதறிப்போன என் ஆடுகளை எல்லா இடங்களிலிருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவேன்.
16 “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்,+ வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன். ஆனால், கொழுத்ததையும் புஷ்டியானதையும் வெட்டிப்போடுவேன். அவற்றுக்குச் சரியான தண்டனை கொடுப்பேன்.”