உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 11:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அந்த நாளில், யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்வதற்காக இரண்டாவது தடவை கைகொடுப்பார். அசீரியாவிலிருந்தும்,+ எகிப்திலிருந்தும்,+ பத்ரோசிலிருந்தும்,+ கூஷிலிருந்தும்,+ ஏலாமிலிருந்தும்,+ சினேயாரிலிருந்தும்,* காமாத்திலிருந்தும், தீவுகளிலிருந்தும்+ அவர்களைத் திரும்பி வரச் செய்வார். 12 எல்லா தேசங்களும் பார்க்கிற விதமாக ஒரு கொடிக் கம்பத்தை நாட்டி, சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பார்;+ பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களை ஒன்றுசேர்ப்பார்.+

  • ஏசாயா 27:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பெருக்கெடுத்து ஓடும் ஆறு* தொடங்கி எகிப்தின் பள்ளத்தாக்குவரை*+ சிதறியிருக்கும் இஸ்ரவேல் ஜனங்களே! மரத்திலிருந்து உதிர்த்த பழங்களை ஒருவன் ஒவ்வொன்றாகச் சேகரிப்பதுபோல், அந்நாளில் யெகோவா உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+

  • எசேக்கியேல் 28:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போன இஸ்ரவேலர்களை நான் மறுபடியும் ஒன்றுசேர்க்கும்போது,+ நான் பரிசுத்தமான கடவுள் என்று எல்லா ஜனங்களும் புரிந்துகொள்வார்கள்.+ என்னுடைய ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்தில்+ என் ஜனங்கள் குடியிருப்பார்கள்.+

  • எசேக்கியேல் 34:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 “நானே என்னுடைய ஆடுகளை மேய்ப்பேன்.+ நானே அவற்றைச் சுகமாகப் படுத்துக்கொள்ள வைப்பேன்”+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 16 “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்,+ வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன். ஆனால், கொழுத்ததையும் புஷ்டியானதையும் வெட்டிப்போடுவேன். அவற்றுக்குச் சரியான தண்டனை கொடுப்பேன்.”

  • ஆமோஸ் 9:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+

      இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+

      திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+

      பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்