-
ஏசாயா 11:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அந்த நாளில், யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்வதற்காக இரண்டாவது தடவை கைகொடுப்பார். அசீரியாவிலிருந்தும்,+ எகிப்திலிருந்தும்,+ பத்ரோசிலிருந்தும்,+ கூஷிலிருந்தும்,+ ஏலாமிலிருந்தும்,+ சினேயாரிலிருந்தும்,* காமாத்திலிருந்தும், தீவுகளிலிருந்தும்+ அவர்களைத் திரும்பி வரச் செய்வார். 12 எல்லா தேசங்களும் பார்க்கிற விதமாக ஒரு கொடிக் கம்பத்தை நாட்டி, சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பார்;+ பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களை ஒன்றுசேர்ப்பார்.+
-
-
ஆமோஸ் 9:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+
இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+
திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+
பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+
-