உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 28:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 யெகோவா வினோதமான செயலைச் செய்யவும்,

      அபூர்வமான வேலையை நிறைவேற்றவும்,+

      பிராசீம் மலையில் செயல்பட்டது போலச் செயல்படுவார்.

      கிபியோனின் பக்கத்திலுள்ள பள்ளத்தாக்கில் கொதித்தெழுந்தது போலக் கொதித்தெழுவார்.+

  • ஏசாயா 29:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால், இந்த ஜனங்கள் அதிர்ச்சியடையும் விதத்தில் மறுபடியும் வினோதமான காரியங்களைச் செய்வேன்;+

      அது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கும்.

      ஞானிகளின் ஞானம் அழிந்துபோகும்.

      விவேகிகளின் விவேகம்* மறைந்துபோகும்.”+

  • புலம்பல் 4:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவின் கோபம் தீ போலப் பற்றியெரிந்தது.

      அவர் தன்னுடைய கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தார்.+

      சீயோனில் நெருப்பு மூட்டினார்; அது அவளுடைய அஸ்திவாரங்களைப் பொசுக்கியது.+

      ל [லாமெத்]

      12 எதிரிகள் எருசலேமின் நுழைவாசலுக்குள் புகுந்துவிட்டார்கள்.+

      உலகத்திலுள்ள எந்த ராஜாவும் ஜனமும் இதை எதிர்பார்க்கவே இல்லை.

  • அப்போஸ்தலர் 13:40, 41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 அதனால், தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது உங்களுக்கு நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 41 அதில், ‘ஏளனம் செய்பவர்களே, பாருங்கள், ஆச்சரியப்படுங்கள், ஒழிந்துபோங்கள்; ஏனென்றால், உங்களுடைய காலத்தில் நான் ஒரு செயலைச் செய்யப்போகிறேன். அதைப் பற்றி யாராவது உங்களுக்கு விவரமாகச் சொன்னால்கூட நீங்கள் அதை ஒருபோதும் நம்ப மாட்டீர்கள்’ என எழுதப்பட்டிருக்கிறது”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்