-
எரேமியா 39:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 ஆனால், கல்தேயர்களின் வீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு போய், எரிகோவின் பாலைநிலத்திலே சிதேக்கியாவைப் பிடித்தார்கள்.+ அவரை காமாத்திலிருந்த+ ரிப்லாவுக்குக் கொண்டுபோய் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் முன்னால் நிறுத்தினார்கள்.+ ராஜா அவருக்குத் தண்டனை விதித்தான். 6 அதோடு, ஆட்களை வைத்து சிதேக்கியாவின் கண் முன்பாகவே அவருடைய மகன்களை வெட்டிப்போட்டான். யூதாவின் முக்கியப் பிரமுகர்கள் எல்லாரையும்கூட வெட்டிக் கொன்றான்.+ 7 பின்பு சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+
-
-
தானியேல் 5:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ராஜாவே, உன்னதமான கடவுள் உங்கள் தகப்பனாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மேன்மையையும் மதிப்பையும் சிறப்பையும் கொடுத்தார்.+ 19 எல்லா இனங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள் அவரைப் பார்த்துப் பயந்து நடுங்குமளவுக்குக் கடவுள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்தார்.+ உங்கள் தகப்பன் தன்னுடைய இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் கொன்றுபோடுவார், யாரை வேண்டுமானாலும் வாழ வைப்பார், யாரை வேண்டுமானாலும் உயர்த்துவார், யாரை வேண்டுமானாலும் தாழ்த்துவார்.+
-