2 “யெகோவா சொல்வது இதுதான்:
‘“மோவாப் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.
சுண்ணாம்புக்காக அவன் ஏதோம் ராஜாவின் எலும்புகளைச் சுட்டெரித்தான்.
2 அதனால், மோவாபுக்குத் தீ வைக்கப்போகிறேன்,
கீரியோத்தின் கோட்டைகள் சாம்பலாகும்.+
பயங்கர கூச்சலும் போர் முழக்கமும் ஊதுகொம்பின் சத்தமும் கேட்கும்.
அப்போது, மோவாப் அழிந்துபோவான்.+