-
எசேக்கியேல் 22:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 உன்னுடைய தீர்க்கதரிசிகள் சதி செய்கிறார்கள்.+ இரையைக் கடித்துக் குதறுகிற கர்ஜிக்கும் சிங்கங்களைப் போல இருக்கிறார்கள்.+ அவர்கள் ஜனங்களைக் கொன்றுபோடுகிறார்கள். சொத்துகளையும் விலை உயர்ந்த பொருள்களையும் பிடுங்கிக்கொள்கிறார்கள். நிறைய பெண்களை விதவைகளாக ஆக்குகிறார்கள். 26 உன்னுடைய குருமார்கள் என் சட்டத்தை மீறுகிறார்கள்.+ என்னுடைய பரிசுத்தமான இடங்களைத் தீட்டுப்படுத்துகிறார்கள்.+ பரிசுத்தமான காரியங்களுக்கும் சாதாரணமான காரியங்களுக்கும் அவர்கள் வித்தியாசம் பார்ப்பதில்லை.+ சுத்தம் எது, அசுத்தம் எது என்று சொல்லிக்கொடுப்பதில்லை.+ என்னுடைய ஓய்வுநாட்களைக் கடைப்பிடிப்பதில்லை. அவர்களால் என்னுடைய பெயர் கெட்டுப்போகிறது.
-