-
யோசுவா 23:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 மோசேயின் திருச்சட்ட புத்தகத்தில்+ எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நீங்கள் ரொம்பத் தைரியத்தோடு கடைப்பிடிக்க வேண்டும். அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப்போகக் கூடாது.+ 7 உங்கள் நடுவில் எஞ்சியிருக்கிற இந்தத் தேசத்தாரோடு சேரவே கூடாது.+ அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை உங்கள் வாயால்கூட உச்சரிக்கக் கூடாது,+ அந்தப் பெயர்களில் சத்தியம் பண்ணவும் கூடாது. அந்தத் தெய்வங்களை நீங்கள் கும்பிடவோ அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ கூடாது.+
-
-
1 ராஜாக்கள் 11:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 என்னுடைய மக்கள் என்னை விட்டுவிட்டு+ சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும் மோவாபியர்களின் தெய்வமாகிய கேமோஷையும் அம்மோனியர்களின் தெய்வமாகிய மில்கோமையும் வணங்குகிறார்கள். அவர்கள் என் வழிகளில் நடக்கவில்லை, எனக்குப் பிடித்த காரியங்களைச் செய்யவில்லை. சாலொமோனுடைய அப்பா தாவீதைப் போல் என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் பின்பற்றவில்லை. அதனால்தான் இப்படிச் செய்யப்போகிறேன்.
-