-
எஸ்றா 6:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 ஆகாயும்+ இத்தோவின் பேரன் சகரியாவும்+ தீர்க்கதரிசனம் சொன்னதைக் கேட்டு உற்சாகம் அடைந்த யூத ஜனங்களின் பெரியோர்கள், கட்டுமான வேலையில் முழு வீச்சில் ஈடுபட்டார்கள்.+ இஸ்ரவேலின் கடவுளுடைய கட்டளைப்படியும்+ கோரேஸ், தரியு, பெர்சிய ராஜாவான அர்தசஷ்டா ஆகியவர்களின் ஆணைப்படியும்+ ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். 15 இப்படி, தரியு ராஜா ஆட்சி செய்த ஆறாம் வருஷம், ஆதார்* மாதம், மூன்றாம் நாளில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.
-