-
எஸ்றா 1:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
1 பெர்சிய ராஜா கோரேஸ்+ ஆட்சி செய்த முதலாம் வருஷத்திலே, எரேமியா மூலம் சொன்னதை+ நிறைவேற்றுவதற்காக கோரேசின் மனதை யெகோவா தூண்டினார். யெகோவாவின் தூண்டுதலால், கோரேஸ் தன்னுடைய சாம்ராஜ்யம் முழுவதும் ஓர் அறிவிப்பு செய்து, அதை எழுதியும் வைத்தார்.+ அதில்,
2 “பெர்சிய ராஜா கோரேஸ் அறிவிப்பது என்னவென்றால், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவா இந்த உலகத்தில் இருக்கிற எல்லா தேசங்களையும் என் கையில் கொடுத்திருக்கிறார்.+ யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி என்னிடம் கட்டளையிட்டிருக்கிறார்.+
-
-
ஏசாயா 45:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
45 யெகோவாவாகிய நான் கோரேசைத்+ தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
நான் அவனுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன்.+
அவனுக்கு முன்பாகத் தேசங்களை அடிபணிய வைப்பேன்.+
அவனுக்கு முன்பாக ராஜாக்களை வீழ்த்துவேன்.
அவனுக்கு முன்பாக நகரவாசல்களும் அவற்றின் கதவுகளும்
பூட்டப்படாமல் திறந்திருக்கும்படி செய்வேன்.
அவனிடம் நான் சொல்வது இதுதான்:
-