29 மேஜையில் வைக்க வேண்டிய தட்டுகளையும் கோப்பைகளையும் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுவதற்கான கூஜாக்களையும் கிண்ணங்களையும்கூட செய்ய வேண்டும். இவற்றைச் சுத்தமான தங்கத்தால் செய்ய வேண்டும்.+
7 படையல் ரொட்டிகளுக்கான மேஜைமேல்+ நீல நிறத் துணியை விரிக்க வேண்டும். அதன்மேல் தட்டுகள், கோப்பைகள், கிண்ணங்கள், திராட்சமது காணிக்கைக்கான கூஜாக்கள்+ ஆகியவற்றை வைக்க வேண்டும். தவறாமல் செலுத்தப்படுகிற ரொட்டிகளும்+ அதன்மேல் இருக்க வேண்டும்.