-
சங்கீதம் 49:16-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 ஒருவன் பணக்காரனாவதைப் பார்த்தோ,
அவனுடைய வீடு ஆடம்பரமாகிக்கொண்டே போவதைப் பார்த்தோ நீ பயப்படாதே.
17 ஏனென்றால், சாகும்போது அவனால் எதையுமே கொண்டுபோக முடியாது.+
அவனுடைய சொத்துப்பத்துகள் எதுவும் அவனோடு போகாது.+
18 உயிரோடு இருக்கும்போது அவன் தன்னையே பாராட்டிக்கொள்கிறான்.+
(ஒருவனுக்கு வசதிவாய்ப்புகள் பெருகும்போது ஜனங்கள் அவனைப் புகழ்வார்கள்.)+
19 ஆனால் கடைசியில், தன்னுடைய முன்னோர்களைப் போலவே அவன் செத்துப்போகிறான்.
அவர்கள் யாரும் இனி வெளிச்சத்தைப் பார்க்கவே மாட்டார்கள்.
-