-
ஆதியாகமம் 45:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 நீங்கள் சீக்கிரமாக அப்பாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்கள் மகன் யோசேப்பு உங்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பியிருக்கிறான்: “கடவுள் என்னை எகிப்து தேசம் முழுவதற்கும் ஆளுநராக நியமித்திருக்கிறார்.+ உடனே புறப்பட்டு வாருங்கள். நேரம் கடத்தாதீர்கள்.+ 10 நீங்களும் உங்கள் மகன்களும் பேரன்களும், ஆடுமாடுகளோடும் மற்ற எல்லாவற்றோடும் எனக்குப் பக்கத்திலேயே கோசேன் பிரதேசத்தில் குடியிருக்கலாம்.+ 11 அங்கு நான் உங்களுக்கு உணவு தருவேன். ஏனென்றால், இன்னும் ஐந்து வருஷத்துக்குப் பஞ்சம் இருக்கும்.+ நீங்கள் வராவிட்டால், நீங்களும் உங்களுடைய வீட்டில் இருக்கிற எல்லாரும் வறுமையில் வாடுவீர்கள், எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள்.” ’ இதை நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.
-