உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 26:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 கடவுள் இப்படிச் சொல்கிறார்: “உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள் உயிர்பெறுவார்கள்.

      என்னுடைய ஜனங்களில் இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள்.+

      மண்ணுக்குள் இருப்பவர்களே,+

      எழுந்து சந்தோஷத்தில் பாடுங்கள்!

      உங்களுடைய பனி விடியற்கால* பனியைப் போல இருக்கிறது.

      செத்துக் கிடப்பவர்களைப் பூமி உயிரோடு எழுப்பும்.*

  • மத்தேயு 22:31, 32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசித்ததில்லையா? 32 ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’+ என்று அவர் சொன்னார், இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்”+ என்று சொன்னார்.

  • லூக்கா 14:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால் விருந்து கொடுக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமானவர்களையும் கால் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் அழையுங்கள்.+ 14 அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆனால், நீதிமான்கள் உயிரோடு எழுப்பப்படும்போது+ உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்” என்று சொன்னார்.

  • யோவான் 5:28, 29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில்* இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.+ 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.+

  • யோவான் 11:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்.+ என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்.

  • எபிரெயர் 11:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 பெண்கள், இறந்துபோன தங்களுடைய அன்புக்குரியவர்களை உயிர்த்தெழுதலில் பெற்றுக்கொண்டார்கள்.+ வேறு சிலர், அதைவிட மேலான உயிர்த்தெழுதல் கிடைப்பதற்காக, விடுதலை* பெறச் சம்மதிக்காமல் சித்திரவதையைச் சகித்தார்கள்.

  • வெளிப்படுத்துதல் 20:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 இறந்துபோன பெரியவர்களும் சிறியவர்களும் சிம்மாசனத்துக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தேன். அப்போது சுருள்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் சுருள்+ என்ற வேறொரு சுருளும் திறக்கப்பட்டது. அந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கிறபடியே, இறந்தவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்