-
யோவான் 5:28, 29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில்* இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.+ 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.+
-
-
வெளிப்படுத்துதல் 20:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 இறந்துபோன பெரியவர்களும் சிறியவர்களும் சிம்மாசனத்துக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தேன். அப்போது சுருள்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் சுருள்+ என்ற வேறொரு சுருளும் திறக்கப்பட்டது. அந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கிறபடியே, இறந்தவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+ 13 கடல் தன்னிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தது; அதேபோல், மரணமும் கல்லறையும்* தங்களிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+
-