-
1 கொரிந்தியர் 15:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல்,+ கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.+ 23 ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் வரிசையில் உயிரோடு எழுப்பப்படுவார்கள்; முதல் நபராக* உயிரோடு எழுப்பப்பட்டவர் கிறிஸ்து;+ பின்பு, கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் அவருடைய பிரசன்னத்தின்போது உயிரோடு எழுப்பப்படுவார்கள்.+
-
-
வெளிப்படுத்துதல் 20:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 பின்பு, சிம்மாசனங்களைப் பார்த்தேன். அதன்மேல் உட்கார்ந்திருந்தவர்களுக்கு நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டது. இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுத்ததற்காகவும், கடவுளைப் பற்றிப் பேசியதற்காகவும் கொல்லப்பட்டவர்களை* பார்த்தேன். அவர்கள் மூர்க்க மிருகத்தையோ அதன் உருவத்தையோ வணங்காதவர்கள், தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதன் அடையாளக் குறியைப் பெறாதவர்கள்.+ அவர்கள் உயிரோடு எழுந்து கிறிஸ்துவுடன் 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்தார்கள்.+
-